கிரிக்கெட் (Cricket)
மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு
- 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத் மற்றும் ஐதராபாத்திடம் தோற்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே லக்னோ, டெல்லி அணிகளை தோற்கடித்து இந்த சீசனை சூப்பராக தொடங்கி இருக்கிறது.