கிரிக்கெட் (Cricket)

டி.வி. மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஐ.பி.எல். போட்டி பார்வையாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2023-05-12 11:21 IST   |   Update On 2023-05-12 11:21:00 IST
  • 48 போட்டிகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் ஐ.பி.எல். போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது.
  • இது கடந்த முழு சீசனுடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் அதிகமாகும்.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடந்து வரும் 16-வது ஐ.பி.எல். போட்டித் தொடர் டி.வி.சேனல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வியாகாம் 18 ஸ்போர்ட்ஸ் வழங்கிய தரவுகளின்படி போட்டி தொடரின் முதல் 5 வாரங்களில் ஜியோ சினிமா 1,300 கோடி பார்வைகளை பெற்று உள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளர் சராசரியாக 60 நிமிடங்கள் செலவழிக்கிறார்கள்.

48 போட்டிகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் ஐ.பி.எல். போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது.

இது கடந்த முழு சீசனுடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டுக்கான இதே எண்ணிக்கையிலான போட்டிகளுடன் (48 ஆட்டம்) ஒப்பிடும் போது 33 சதவீதம் அதிகமாகும். குஜராத், மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

டி.வி. பார்வையாளர்கள் முதல் 48 போட்டிகளில் 26.6 கோடி நிமிடங்களை செலவழிக்கிறார்கள்.

Tags:    

Similar News