- மும்பை அணிக்கு எதிராக சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் எடுத்தார்.
- இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் விராட் கோலியின் சாதனையை கில் சமன் செய்வார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 2-வது குவாலிபையர் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் எடுத்துக் கொடுத்ததன் மூலமாக அந்த அணி 233 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் 129 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் எடுத்த 128 ரன்கள் (நாட் அவுட்) சாதனையை கில் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆர்சிபி அணிக்கு எதிராக சுப்மன் கில் 104 ரன்கள் (நாட் அவுட்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 101 ரன்கள் எடுத்துள்ளார். இப்படி ஒரே சீசனில் 3 முறை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
நாளை சென்னைக்கு எதிராக நடக்கும் இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் ஒரு சீசனில் 4 சதங்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:-
132* - கேஎல் ராகுல் (பஞ்சாப்) ஆர்சிபிக்கு எதிராக (துபாய்) 2020
129 - சுப்மன் கில் (குஜராத்) மும்பைக்கு எதிராக (அகமதாபாத்) 2023
128* - ரிஷப் பண்ட் (டெல்லி) ஐதராபாத்க்கு எதிராக (டெல்லி மைதானம்) 2018
127 - முரளி விஜய் (சிஎஸ்கே) ராஜஸ்தானுக்கு எதிராக (சென்னை) 2010