கிரிக்கெட் (Cricket)

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஐபிஎல் திருவிழா

Published On 2023-03-31 18:42 IST   |   Update On 2023-03-31 18:57:00 IST
  • நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.
  • துவக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.

அகமதாபாத்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.  துவக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிகளை மந்த்ரா பேடி தொகுத்து வழங்க, பாடகல் அரிஜித் சிங்கின் அசத்தலான பாடலுடன் விழா தொடங்கியது. நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் கண்கவர் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

துவக்க விழா நிறைவடைந்ததும் போட்டி தொடங்குகிறது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.

இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. 

Tags:    

Similar News