கிரிக்கெட்

குஷால் மென்டிஸ்

இந்திய அணிக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை

Published On 2023-01-05 15:20 GMT   |   Update On 2023-01-05 15:20 GMT
  • இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சனகா 56 ரன்கள் சேர்த்தார்.
  • இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

புனே:

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலனா இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது.

துவக்க வீரர் குஷால் மென்டிஸ் 52 ரன்கள் சேர்த்தார். பதும் நிசங்கா 33 ரன்கள், சரித் அசலங்கா 37 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் தசுன் சனகா, 22 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக 16வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

Tags:    

Similar News