கிரிக்கெட்

2வது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு- ராகுல் திரிபாதி அறிமுகம்

Published On 2023-01-05 13:13 GMT   |   Update On 2023-01-05 13:13 GMT
  • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
  • புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்றைய போட்டி நடக்கிறது.

புனே:

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய அணியில் உள்ளூர் வீரர் ராகுல் திரிபாதி, சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். 31 வயது நிரம்பிய இவர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரை அடுத்து, ஆடவர் டி20 போட்டிகளில் அறிமுகமான மூன்றாவது மூத்த வீரர் ஆவார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை வீரர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News