கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஷூப்மன் கில், விராட் கோலி சதம் விளாசினர்

Published On 2023-01-15 11:36 GMT   |   Update On 2023-01-15 11:36 GMT
  • கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
  • விராட் கோலி, ஷூப்மன் கில் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

திருவனந்தபுரம்:

 இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷூப்மன் கில் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16-வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் ஷூப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. 89 பந்துகளில் சதம் அடித்த ஷுப்மன் கில், 116 ரன்கள் சேர்த்த நிலையில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதேபோல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் சதம் அடித்து அசத்தினர். சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 46-வது சதம் இதுவாகும்.

Tags:    

Similar News