கிரிக்கெட் (Cricket)
லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா
2023-11-02 12:23 GMT
கில் கோலியை தொடர்ந்து சதம் வாய்ப்பை தவறவிட்ட ஷ்ரேயாஸ். 82 ரன்னில் அவுட்
2023-11-02 11:36 GMT
இந்தியா அணி 39 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
2023-11-02 11:28 GMT
நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக தூர சிக்சரை பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் அய்யர். 106 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் மேக்ஸ்வெல் 104 மீட்டர் தூரம் விளாசி 2-வது இடத்தில் உள்ளார்.
2023-11-02 11:16 GMT
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2023-11-02 10:27 GMT
மும்பையில் நடைபெறும் இந்தியா - இலங்கை போட்டியை சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் பார்த்து வருகின்றனர்.