கிரிக்கெட்

அரை சதமடித்த சஞ்சு சாம்சன்

3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி - நியூசிலாந்து ஏ அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்திய ஏ அணி

Published On 2022-09-27 15:22 GMT   |   Update On 2022-09-27 15:22 GMT
  • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி முழுமையாக கைப்பற்றியது.
  • சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், திலக் வர்மா ஆகியோர் அரை சதமடித்தனர்.

சென்னை:

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.

இரு போட்டிகளில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட் செய்தது. 49.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது.

சஞ்சு சாம்சன் 54 ரன்னும், ஷர்துல் தாக்குர் 51 ரன்னும், திலக் வர்மா 50 ரன்னும் எடுத்தனர்.

அதன்பின், 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 38.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ராஜ் பாவா 4 விக்கெட்டும், ராகுல் சஹார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 'ஏ' அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

Tags:    

Similar News