கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணியின் 7 வருட காத்திருப்பை நிறைவு செய்த சுப்மன் கில் சதம்

Published On 2024-02-05 02:33 GMT   |   Update On 2024-02-05 02:33 GMT
  • 2017-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் 3-வது பேட்ஸ்மேன் சதம் அடித்தது இல்லை.
  • சுப்மன் கில் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது சதம் அடித்தார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் போட்டியின்போது இந்திய அணியின் சுப்மன் கில் சதம் விளாசினார்.

டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில்லை ரஞ்சி போட்டியில் விளையாட சொல்ல வேண்டும் என தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த விமர்சனத்திற்கு சுப்மன் கில் முற்றுப் புள்ளி வைத்தார்.

மேலும், இந்திய டெஸ்ட் அணியில் 3-வது நபராக களம் இறங்கும் பேட்ஸ்மேன் இந்திய மண்ணில் சதம் அடித்து ஏழு வருடங்கள் ஆகிறது. புஜாரா கடந்த 2017-ம் ஆண்டு சதம் அடித்திருந்தார். அதன்பின் 3-வது வீரராக களம் இறங்கிய வீரர்கள் இந்திய மண்ணில் சதம் அடித்தது கிடையாது. தற்போது சுப்மன் கில் சதம் அடித்து ஏழு ஆண்டு காத்திருப்பை பூர்த்தி செய்துள்ளார்.

விசாகப்பட்டினம் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 255 ரன்னில் சுருண்டது.

இந்தியா 2-வது இன்னிங்சில் 253 ரன்னில் ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News