கிரிக்கெட்

புவனேஷ்வர் குமார் 

ஸ்விங் பந்து வீச்சு மூலம் தாக்குதல் நடத்தினேன்- புவனேஷ்வர் குமார் பேட்டி

Published On 2022-07-09 21:22 GMT   |   Update On 2022-07-09 21:22 GMT
  • இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து 121 ரன்களுக்கு சுருண்டது.
  • புவனேஷ்வர் குமார், பும்ராவின் சிறப்பான வேகப்பந்து வீச்சால் இந்தியா வெற்றி.

பர்மிங்காம்:

இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டையும், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர்குமார், ஸ்விங் முறை பந்து வீச்சு மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார்.

டி20 கிரிக்கெட்டில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆனது தமக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியதில் ஆச்சரியமில்லை என்றும், அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்திற்கு எதிராக அவர்களது சொந்த நாட்டில் 3-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றினால் நன்றாக இருக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டார்

தாம் நேர்மறையாகவே சிந்திப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தமக்கு எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன் என்றும் புவனேஷ்வர் குமார் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News