கிரிக்கெட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசி தனது சாதனையை தானே முறியடித்த ஐதராபாத்

Published On 2024-04-15 16:15 GMT   |   Update On 2024-04-15 16:15 GMT
  • அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.
  • கிளாசன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அபிஷேக் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 41 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 4-வது இடத்தில் உள்ளார்.

இதனை தொடர்ந்து கிளாசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அரை சதம் விளாசினார். அவர் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மார்க்ரம் - சமத் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மார்க்ரம் 32 ரன்னிலும் சமத் 37 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து சன்ரைசர்ஸ் அணி 278 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய ஐதராபாத் சாதனையை அவர்களே முறியடித்தனர். மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத் அணி 277 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

முதல் இரண்டு இடங்களில் ஐதராபாத் அணியும் 3-வது இடத்தில் கேகேஆர் (272) அணியும் 4-வது இடத்தில் ஆர்சிபி (263) அணியும் உள்ளது.

Tags:    

Similar News