null
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாண்ட்யா விளையாடுவாரா? பிசிசிஐ வெளியிட்ட தகவல்
- இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- வரும் 22-ந் தேதி தரம்சாலாவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்களாதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி 50 ஓவர் முடிவில் 256 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அதிரடி சதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வரும் 22-ந் தேதி தரம்சாலாவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். காயம் குறித்த சிகிச்சைக்காக அவர் பெங்களூர் செல்ல இருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார். அதற்கு அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.