கிரிக்கெட் (Cricket)

கே.எல்.ராகுல் போராட்டம் வீண் - லக்னோவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

Published On 2023-04-22 19:15 IST   |   Update On 2023-04-22 19:15:00 IST
  • முதலில் ஆடிய குஜராத் 135 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய லக்னோ 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

லக்னோ:

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

லக்னோவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 66 ரன்கள் எடுத்தார். விரித்திமான் சகா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், கைல் மேயர்ஸ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் அரை சதமடித்தார். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 23 ரன்னில் வெளியேறினார். கே.எல்.ராகுல் 68 ரன்னில் அவுட்டானார்.

கடைசி ஓவரில் மோகித் 2 விக்கெட் வீழ்த்தினார். 2 பேர் ரன் அவுட் ஆகினர்.

இறுதியில், லக்னோ அணி 128 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News