கிரிக்கெட்

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி

Update: 2022-12-02 17:50 GMT
  • ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்தார்.
  • ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெர்த்:

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் வர்ணனையாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், வர்ணனையின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News