கிரிக்கெட்

ரோகித், கோலியின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- கவாஸ்கர்

Published On 2024-01-11 07:05 GMT   |   Update On 2024-01-11 07:05 GMT
  • டி20 உலகக் கோப்பையில் ரோகித், கோலியின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

புதுடெல்லி:

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இன்று ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் போட்டியாகும்.

அந்த அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது. 2-வது ஆட்டம் 14-ந் தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.

சீனியர் வீரர்களான ரோகித்சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதனால் இருவரும் ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு பெற்றனர். இருவரும் 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளனர்.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு ஐ.பி.எல். போட்டி முக்கியமானதாக இருக்கும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் இந்த போட்டியின் சிறப்பு நிலை உலகக்கோப்பைக்கு முக்கியமானதாக இருக்கும்.

ரோகித்சர்மாவும், விராட் கோலியும் சாதாரண ஐ.பி.எல்.லில் ரன் குவித்தாலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன் குவிப்பை எதிர்பார்க்க முடியாது. அவர்களது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை அணியில் தேர்வு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News