கிரிக்கெட்

இரு அணி கேப்டன்கள்

டிஎன்பிஎல் - திண்டுக்கல் அணி வெற்றிபெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேலம்

Published On 2022-07-24 15:17 GMT   |   Update On 2022-07-24 15:17 GMT
  • டாஸ் வென்ற சேலம் ஸ்பர்டன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி 124 ரன்களை எடுத்தது.

சேலம்:

6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. திண்டுக்கல் அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சேலம் அணியினரின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

அந்த அணியின் டேரில் பெராரியோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 38 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரனவ் குமார் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

திண்டுக்கல் அணி சார்பில் சிலம்பரசன், விவேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News