கிரிக்கெட்

டிஎன்பிஎல்- 44 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி

Published On 2023-07-02 13:44 GMT   |   Update On 2023-07-02 13:44 GMT
  • கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது.
  • 18 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து மதுரை பாந்தர்ஸ் தோல்வி.

7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் பேட்டிங் செய்தனர். சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இதேபோல், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகிலேஷ் 11 ரன்களும், ராம் அரவிந்த் மற்றும் முகமது தலா ஒரு ரன் எடுத்து அவுட்டாகினர்.

இதன்மூலம், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. அடுத்ததாக, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஹரி நிஷாந்த் 33 ரன்களிலும், ஸ்ரீ அபிஷேக் 17 ரன்களிலும், தீபன் லிங்கேஷ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 14 ரன்களிலும், கிரிஷ் ஜெயின் 11 ரன்களிலும், ஸ்வாப்நில் சிங் 10 ரன்களிலும், ஜகதீசன் கவுஷிக் 9 ரன்களிலம், சரவணன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

குர்ஜப்னீத் சிங் 5 ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து மதுரை பாந்தர்ஸ் தோல்வியை சந்தித்தது.

இதனால், 44 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணிழை வீழ்த்தி கோவை கிங்ஸ் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.

Tags:    

Similar News