கிரிக்கெட்

ஆஸ்திரேலிய வீரர்களிடம் கோரிக்கை வைக்கவில்லை: ஜெய் ஷா தடாலடி

Published On 2024-05-24 09:13 GMT   |   Update On 2024-05-24 09:13 GMT
  • 10 முதல் 11 மாதம் அணியுடன் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு ஒத்து வராது- ரிக்கி பாண்டிங்.
  • பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன்- ஜஸ்டின் லாங்கர்.

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை கோரியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற 28-ந்தேதி கடைசி நாளாகும்.

வெளிநாட்டு பயிற்சியாளரை பிசிசிஐ விரும்புவதாகவும் ஸ்டீபன் பிளமிங் அல்லது ரிக்கி பாண்டிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேவேளையில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் "தலைமை பயிற்சியாளர் பதவிக்கான பிசிசிஐ தன்னை அணுகியது. தன்னுடைய வாழ்க்கை முறைக்கு தற்போது அந்த பதவி பொருந்தாது" எனத் தெரிவித்திருந்தார்.

மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜஸ்டின் லாங்கர் தலைமை பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்தியாவில் தலைசிறந்த முன்னாள் வீரர்கள் உள்ளபோது, ஏன் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் எனவும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் யாரிடமும் பிசிசிஐ கோரிக்கை வைக்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News