கிரிக்கெட் (Cricket)

லைவ் அப்டேட்ஸ்: சதம் அடித்து போட்டியை முடித்து வைத்த விராட் கோலி

Published On 2023-10-19 13:42 IST   |   Update On 2023-10-20 06:19:00 IST
2023-10-19 13:08 GMT

இந்திய அணி முதல் 2 ஓவர்களில் 14 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 9 ரன்னிலும் சுப்மன் கில் 5 ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.

2023-10-19 12:29 GMT

இந்திய அணிக்கு எதிராக வங்காளதேசம் அணி 256 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

2023-10-19 11:54 GMT

வங்காளதேசம் அணி 201 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.



2023-10-19 11:43 GMT

40 ஓவரில் வங்காளதேசம் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

2023-10-19 11:29 GMT

ஷர்துல் தாகூர் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். டவ்ஹித் ஹ்ரிடோய் 16 ரன்னில் அவுட் ஆனார். வங்காளதேச அணி 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 எடுத்து விளையாடி வருகிறது.



2023-10-19 10:58 GMT

வங்காளதேசம் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

2023-10-19 10:54 GMT

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லிட்டன் தாஸ் 66 ரன்னில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

2023-10-19 10:32 GMT

129 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்தது வங்காளதேசம். கேஎல் ராகுல் அற்புதமாக அந்த கேட்சை பிடித்தார்.


 

 

2023-10-19 10:20 GMT

வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். 



2023-10-19 10:19 GMT

பொறுப்புடன் விளையாடிய லிட்டன் தாஸ் அரை சதம் அடித்து அசத்தினார்.

Tags:    

Similar News