கிரிக்கெட் (Cricket)

லைவ் அப்டேட்ஸ்: சதம் அடித்து போட்டியை முடித்து வைத்த விராட் கோலி

Published On 2023-10-19 13:42 IST   |   Update On 2023-10-20 06:19:00 IST
2023-10-19 09:50 GMT

அரை சதம் விளாசிய தன்சித் ஹசன் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.



2023-10-19 09:43 GMT

ஒருநாள் போட்டியில் வங்காளதேச வீரர் தன்சித் ஹசன் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

2023-10-19 09:32 GMT

காயத்தால் வெளியேறிய பாண்ட்யாவுக்காக மீதமுள்ள 3 பந்துகளை விராட் கோலி வீசினார்.



2023-10-19 09:20 GMT

ஹர்திக் பாண்ட்யா தனது முதல் ஓவரையும் அணியின் 9 -வது ஓவரையும் வீசினார். முதல் பந்து ரன் ஏதும் போகவில்லை. அடுத்த பந்தை லிண்டன் தாஸ் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தையும் பவுண்டரி அடித்தார். அதனை தடுக்க பாண்ட்யா காலை நீட்டினார். அப்போது கால் தடுமாறி கீழே விழுந்தார். இதனை அடுத்து நொண்டியபடி அவர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.

2023-10-19 08:24 GMT

நாங்கள் அதிக ரன்கள் குவித்தால், அது அணிக்கு நன்றாக இருக்கும் என வங்காளதேச அணி கேப்டன் ஷான்டோ தெரிவித்துள்ளார். ஷாகிப் அல் ஹசன் விளையாடாத காரணத்தினால் ஷான்டோ கேப்டனாக செயல்படுகிறார்.

2023-10-19 08:22 GMT

நான் முதலில்தான் பந்து வீச விரும்பினேன். அணியில் மாற்றம் செய்வதற்கான எந்த காரணத்தையும் பார்க்கவில்லை. தற்போது வரை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதே உத்வேகத்துடன் செல்ல இருக்கிறோம்- ரோகித் சர்மா

Tags:    

Similar News