கிரிக்கெட்

தோனியிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன - அவனிஷ் ராவ்

Published On 2024-02-12 12:47 GMT   |   Update On 2024-02-12 12:47 GMT
  • ஏலத்தில் அவர் ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டார்.
  • சி.எஸ்.கே. ரசிகர்களை பெருமையடைய வைப்பேன் என்று ஆரவல்லி அவனிஷ் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக 18 வயதாகும் ஆரவல்லி அவனிஷ் ராவ் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார்.

ஐ.பி.எல். தொடரில் 5 கோப்பைகளை வென்ற எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஏலத்தில் அவர் ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டார்.

இந்நிலையில் விரைவில் சென்னை அணிக்காக விளையாடி எம்.எஸ். தோனி மற்றும் சி.எஸ்.கே. ரசிகர்களை பெருமையடைய வைப்பேன் என்று ஆரவல்லி அவனிஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

சென்னை அணிக்காக நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை நான் புரிந்து கொள்வதற்கு நீண்ட நேரமானது. நான் தோனி சார் மற்றும் சி.எஸ்.கே. குடும்பத்தை பெருமையடைய வைக்க விரும்புகிறேன். தோனி தலைமையில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும்.

தோனி அவர்களிடமிருந்து, கடினமான சூழ்நிலையில் எப்படி அசத்துவது என்பதை பற்றி கற்றுக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவர் விளையாடிய இன்னிங்ஸ்போல அவரிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News