கிரிக்கெட் (Cricket)
null

தொடரும் சோகம்.. 13 ரன்னில் கேட்ச் மிஸ்.. மார்ஷ்- வார்னர் அதிரடி சதம்: வீடியோ

Published On 2023-10-20 16:12 IST   |   Update On 2023-10-20 18:05:00 IST
  • டேவிட் வார்னருக்கு 13 ரன்னில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.
  • வார்னர், 6 சிக்ஸ் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்துள்ளார்.

பெங்களூரு:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 18-வது லீக்கில் ஆஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக உஸ்மா மிர் அணியில் இடம் பிடித்துள்ளார்.


இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 13 ரன்னில் இருந்த போது அப்ரிடி பந்து வீச்சில் டாப் எட்ஜ் ஆனது. அந்த கேட்ச்சை ஷதாப் கானுக்கு பதிலாக களமிறங்கிய உஸ்மா மிர் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.


இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட வார்னர், பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். அதிரடியாக விளையாடிய வார்னர், 6 சிக்ஸ் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்துள்ளார். மறுமுனையில் விளையாடிய மார்ஷ் தனது பங்கிற்கு 6 சிக்ஸ் 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.


தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 31 ஓவர் முடிவில் 214 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Tags:    

Similar News