கிரிக்கெட்

3வது போட்டியில் வெற்றி: டி20 தொடரில் நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

Published On 2024-02-25 04:46 GMT   |   Update On 2024-02-25 05:33 GMT
  • மழை காரணமாக டி20 போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.
  • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 118 ரன்கள் எடுத்தபோது மழையால் தடைபட்டது.

ஆக்லாந்து:

ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 10.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹெட் 33 ரன்னும், ஷாட் 27 ரன்னும், மெக்ஸ்வெல் 20 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவரில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என நியூசிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் நியூசிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

ஆட்ட நாயகனாக மேத்யூ ஷாட்டும், தொடர் நாயகனாக மிட்செல் மார்ஷும் தேர்வாகினர்.

Tags:    

Similar News