கிரிக்கெட்

அடுத்த ஐபிஎல் சீசன் ஏலத்தில் அஷ்வின் விற்கப்படாமல் கூட போகலாம் - சேவாக்

Published On 2024-04-29 15:55 GMT   |   Update On 2024-04-29 15:55 GMT
  • ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அஸ்வின் பந்து வீசுவதில்லை
  • டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பந்து வீசினால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தான் அழுத்தம் ஏற்படும்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

அஷ்வின் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் அஸ்வினின் பந்துவீச்சு இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் அஷ்வின் விக்கெட் வீழ்த்தும் பந்துகளை தவிர்த்து வருகிறார். ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அவர் பந்து வீசுவதில்லை. எனவே என்னை பொறுத்தவரை இனிவரும் போட்டிகளில் நான் அவரை சேர்க்க மாட்டேன். சொல்லப் போனால் அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News