கிரிக்கெட்
null

மன்கட் செய்த ஆடம் ஜம்பா...நாட் அவுட் கொடுத்த நடுவர்கள்

Published On 2023-01-04 11:45 GMT   |   Update On 2023-01-04 11:46 GMT
  • முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
  • நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் டி20 லீக்கில் நடந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 108 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ரினிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஆடம் ஜம்பா, இந்த போட்டியின் கடைசி ஓவரின் 5-வது பந்தை வீசியபோது பவுலிங் முனையில் இருந்த பேட்ஸ்மேன் ரோஜர்ஸ் பந்துவீசும் முன்பாக கிரீஸை விட்டு வெளியேறினார். இதை கவனித்த ஜம்பா, மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தார். இது 3-வது நடுவரின் ரிவ்யூக்கு சென்றது.


மேலோட்டமாக பார்க்கும்போது எல்லாம் சரியாக இருந்து, அவுட் என்று அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பந்துவீசும்போது பவுலரின் கை, 90 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. இதை மீறி, 90 டிகிரியையும் தாண்டி ஜம்பாவின் கை சென்றுள்ளது. இதன் அடிப்படையில் ரன் அவுட் கிடையாது என்று நடுவர்கள் முடிவை அறிவித்தனர்.


அதாவது பவுரின் கை, முன்னால் சென்று விடக்கூடாது என்பது விதிமுறை. அதற்காக இந்த 90 டிகிரி கோண அளவீடு கணக்கிடப்படுகிறது. ஜம்பாவின் மன்கட் அப்பீலும், நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News