கிரிக்கெட்
null

பும்ரா இல்லாமல் விளையாட பழகிக்கொள்ள வேண்டும் - இந்திய அணிக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை

Published On 2023-01-12 06:31 GMT   |   Update On 2023-01-12 06:34 GMT
  • விளையாட்டின் போது முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான்.
  • இந்திய அணியில் பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து விளையாடவில்லை.

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பும்ரா தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பும்ரா இல்லாததால் இந்திய அணியின் வேகப்பந்து வரிசை தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இதனை ரசிகர்கள் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலேயே உணர்ந்தனர்.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 206 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் மேலும் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர். இலங்கை அணி வீரர்கள் 9ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியில் தற்போது முகமது ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களைத் தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த திறமையை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

இந்திய அணியில் பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து விளையாடவில்லை. எனவே அவர் இல்லாமலும் விளையாடுவதற்கு இந்திய அணி பழகிக் கொள்ள வேண்டும்.

விளையாட்டின் போது முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான். எனவே குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே நம்பி ஒரு அணி இருக்க கூடாது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நீக்கப்பட்டார். இது நல்ல செய்தி இல்லைதான். ஆனால் அணி உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டியுள்ளது.

Tags:    

Similar News