கிரிக்கெட்

சச்சினால் படைக்க முடியாத மூன்று சாதனைகள்

Update: 2022-08-04 09:43 GMT
  • டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்களை அடித்திருக்கிறார்.
  • சச்சின் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்களை அடித்துள்ளார்

சர்வதேச கிரிக்கெட் 100 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ஒரே வீரராக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர்16 வயதில் 1989 ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார். இந்திய அணிக்காக பல எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார்.

சச்சின் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34000 ரன்கள் எடுத்துள்ளார். 100 சதங்களை அடித்து 2013-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சச்சின் சிறப்பாக விளையாடித் தகர்க்க முடியாத சாதனைகளைப் படைத்திருந்தாலும் சர்வதேச உலகில் அவரால் முறியடிக்க முடியாத சில சாதனைகள் உள்ளன.

இந்திய வீரர் சச்சின் 100 சதங்களை அடித்திருந்தாலும் அவர் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதங்கள் அடிப்பதைத் தவற விட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்களை அடித்துள்ள அவர், டெஸ்ட் போட்டிகளில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் ஒரு இன்னிங்ஸில் 248 ரன்கள்தான்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், கருண் நாயர் ஆகிய இருவர் மட்டுமே டெஸ்டில் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சேவாக் இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளார். சமீபத்தில் 2016 ஆம் ஆண்டில் முச்சதத்தை அடித்து இந்த பட்டியலில் கருண் நாயரும் இடம் பிடித்துள்ளார். லக்ஷ்மனன் 281 ரன்கள் அடித்தும் முச்சதத்தை தவற விட்டவர்கள் பட்டியலில் உள்ளார்

டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்களை அடித்திருந்தாலும், அவரால் முச்சதத்தை அடித்தவர்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை.


சச்சின் 1989 முதல் 2011 உலகக்கோப்பை வரை விளையாடியிருக்கிறார். ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிகளிலும் பெரும்பாலான சாதனைகளை படைத்துள்ளார். உலக்கோப்பை தொடர்களில் மட்டும் 2278 ரன்களை அடித்து அதிக சதம் மற்றும் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியாவுக்காக 1992, 1996, 1999, 2003, 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையில் சச்சின் விளையாடியிருக்கிறார். இருந்தாலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ரிக்கி பாண்டிங் 46 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, டெண்டுல்கரை விட, உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை விளையாடியவர் என்ற சாதனையைப் படைத்து, சச்சினை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் 1999, 2003 மற்றும் 2007 ஆகிய மூன்று உலகக் கோப்பை வெற்றி போட்டிகளில் விளையாடி கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். 2011-ல் சச்சின் விளையாடிய கடைசி உலக கோப்பை தொடர்தான் இவருக்கும் கடைசி உலகக்கோப்பை தொடர்.

டெஸ்டில் அதிக பந்துகளை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய வியப்புக்குரிய விஷயமாகும். இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரும், நட்சத்திர வீரருமான ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 31,258 பந்துகளைச் சந்தித்து சர்வதேச கிரிக்கெட் உலகில் டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை சந்தித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.சச்சினால் படைக்க முடியாத மூன்று சாதனைகள்

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 29,437 பந்துகளைச் சந்தித்துள்ளார், சச்சின் அறிமுகமாகி 7 ஆண்டுகளுக்குப் பின் அறிமுகமாகிய திராவிட் சச்சினை விட அதிக பந்துகளைச் சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும் 15921 ரன்களும் அடித்து அதிக ரன்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்தாலும் அதிக பந்துகளைச் சந்தித்தவர் என்ற சாதனையைத் தவற விட்டார்.

Tags:    

Similar News