கிரிக்கெட்

இந்தியா- நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

Update: 2022-11-27 07:24 GMT
  • இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது.
  • கில் 45 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஹாமில்டன்:

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ஷிகர்தவான், சுப்மன்கில் களமிறங்கினர். இந்திய அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்ட்டது.

இந்த நிலையில் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. மழையால் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டதால், இந்த போட்டி 29 ஓவர்கள் (ஒரு அணிக்கு) கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே உணவு இடைவேளை அளிக்கப்படும். குடிநீர் இடைவேளை ஏதும் அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆட்டம் தொடர்ந்த பிறகு தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார், கில் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நடுவர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். கில் 45 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 30-ந் தேதி நடைபெறும்.

Tags:    

Similar News