சினிமா

ஸ்வர மவுலி விருது பெற்றார் லதா மங்கேஷ்கர்

Published On 2018-05-13 10:34 GMT   |   Update On 2018-05-13 11:08 GMT
புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஸ்வர மவுலி விருதை சங்கராச்சாரியா வித்யநரசிம்மா பாரதி சுவாமிகள் வழங்கி கவுரவித்தார். #LataMangeshkar #SwaraMauliaward

மும்பை: 

லதா மங்கேஷ்கர் (88), இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 

இந்நிலையில், அவரது கலை பணிகளை பாராட்டும் வகையில் அவருக்கு ஸ்வர மவுலி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சங்கராச்சாரியா வித்யநரசிம்மா பாரதி சுவாமிகள், லதா மங்கேஷ்கரிடம் வழங்கினார். அப்போது லதா மங்கேஷ்கரின் சகோதரிகள் ஆஷா போஷ்லே, உஷா மங்கேஷ்கர் மற்றும் சகோதரர் ஹிரிதய்நாத் மங்கேஷ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய லதா மங்கேஷ்கர், ஜகத்குரு சங்கரச்சாரியா அவர்கள் கோலாபூரில் வைத்து எனக்கு ஸ்வர பாரதி விருது வழங்கினார். அது எந்த ஆண்டு என்பதை நினைவுகூற முடியவில்லை. இப்போது எனக்கு இரண்டாவதாக சுவர மவுலி விருது வழங்கப்பட்டுள்ளது. அதை நிலைத்து பெருமை படுகிறேன். அனைத்து விருதுகளும் பெரியது தான். அனைத்து விருதுகளையும் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விருதை பெருவதில் மகிழ்ச்சி அடைகிறேன், என கூறினார். #LataMangeshkar #SwaraMauliaward
Tags:    

Similar News