எஸ்.பி அஜய் மார்கண்டேயா எனும் மார்க் (சுதீப்), சட்டத்தையும் விதிகளையும் மீறி செயல்படும் குற்றவாளிகளைத் தன் பாணியில் தண்டிக்கும் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். கர்நாடகாவில் சுமார் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை காவல்துறையினர் கையகப்படுத்துகின்றனர்.
அது கொல்ஹாபூரில் டானாக இருக்கும் நவீன் சந்திரா உடையது என்பதும், அதனை கடத்தும் வேலையை செய்வது முதல்வரின் மகனுடன் தொடர்புடைய ஸ்டீபன் ராஜுடையது என்பதும் தெரிய வருகிறது.
அந்த போதைப்பொருளை சுதீப் தனது கன்ட்ரோலில் எடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, அம்மாநி முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில் சீரியஸாக இருக்க, அவரது மகன் ஷைன் டாம் சாக்கோ தன்னை முதல்வராக்க கையெழுத்திடுமாறு கேட்கிறார்.
ஆனால், கட்சியில் மூத்தவருக்குதான் பதவி கொடுக்க வேண்டும் என அவர் கூற, தாயை கொன்றுவிட்டு ஷைன் டாம் சாக்கோ அவரது கையெழுத்தை போட்டுக் கொள்கிறார். முதல்வரை அவரது மகன் கொலை செய்ததை ரகசிய செல்போன் மூலம் டாக்டர் ஒருவர் வீடியோ எடுக்க, அந்த விஷயம் ஷைன் டாம் சாக்கோவுக்கு தெரிய வருகிறது.
அந்த வீடியோ வெளியேற வரக்கூடாது என அவர் கைப்பற்ற முயற்சிக்கும்போது, மங்களூருவின் பல இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
இந்தநிலையில், களத்தில் இறங்கும் சுதீப் குழந்தைகளை காப்பாற்றினாரா? முதல்வர் கொலை தொடர்பான வீடியோ என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
படம் முழுவதும் சுதீப்பின் கம்பீரமான நடிப்பு மற்றும் வசனங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்து. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டியுள்ளார். சண்டைக் காட்சிகள் மிகவும் ஸ்டைலிஷாகவும், ஹாலிவுட் தரத்திலும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி திரையரங்குகளில் விசில் பறக்க வைக்கிறது. அநீதிக்கு எதிராக சுதீப் பேசும் பன்ச் வசனங்கள் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
இயக்கம்
நேர்மையான போலீஸ் அதிகாரி Vs வில்லன் என்ற காலங்காலமாகப் பார்த்த கதைக்களம் தான். கதையில் பெரிய திருப்பங்கள் அதிகம் இல்லை. படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சற்று இழுவையாக இருக்கிறது. எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசை
அஜனீஷ் லோக்நாத் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவு
திரைப்படத்தின் தரம் உயர்வாகத் தெரிவதற்கு அதன் ஒளிப்பதிவு ஒரு மிக முக்கியமான காரணம்.