சினிமா
பார்ட்டி படக்குழு

பார்ட்டி

Published On 2020-05-05 14:15 IST   |   Update On 2020-05-05 13:56:00 IST
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி உள்ள பார்ட்டி படத்தின் முன்னோட்டம்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு எழிலரசு குணசேகரன் வசனம் எழுதியுள்ளார். கங்கை அமரன், கருணாகரன்.பி, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

Similar News