சினிமா
பேய் மாமா

பேய் மாமா

Published On 2020-04-10 14:15 IST   |   Update On 2020-04-10 13:40:00 IST
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் பேய் மாமா படத்தின் முன்னோட்டம்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் பேய் மாமா.யோகிபாபுவுடன் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏலப்பன், விக்னேஷ் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் சக்தி சிதம்பரம் கூறுகிறார்: ‘‘பேய் மாமா, ஒரு திகில் படம். வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரை கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறான். 

அவனுடைய முகமூடியை கிழித்து உலக மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார், உள்ளூர் சித்த வைத்தியர். அவரை வில்லன் கொன்று விடுகிறான். சித்த வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து அப்பாவி மக்களை காப்பாற்ற களம் இறங்குகிறது. இதுவே ‘பேய் மாமா’வின் கதை. இந்த கதை இப்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து விட்டது. 

நாங்கள் படப்பிடிப்பை தொடங்கும்போது, கொரோனா பற்றி உலகுக்கு தெரியாது. அந்த உயிர் கொல்லி நோய் தொடர்பான காட்சிகளை திகிலாக படமாக்கி இருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கிராமங்களில் நடைபெற்றது. சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

Similar News