OTT
null

இந்த வார ஓடிடி ரிலீஸ்

Published On 2025-06-19 21:10 IST   |   Update On 2025-06-19 21:30:00 IST
  • ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர்.
  • இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

"ஜின் தி பெட்"

டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் நடித்துள்ள படம் 'ஜின் தி பெட்'. இதில் பவ்யா திரிகா, இமான் அண்ணாச்சி, பால சரவணன், வடிவுக்கரிசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில், ஆக்சன், நகைச்சுவை கலந்த இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

"பிரின்ஸ் அண்ட் பேமிலி"

பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ராணியா ராணா, தியான் ஸ்ரீனிவாசன், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பிரின்ஸ் அண்ட் பேமிலி'. மலையாள நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த மே 9ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், தமிழ் டப்பிங்குடன் நாளை ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

"கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2"

அகமது கபீர் இயக்கியுள்ள மலையாள கிரைம் திரில்லர் வெப் தொடர் 'கேரளா கிரைம் பைல்ஸ்'. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் இந்திரன்ஸ், ஹரிஸ்ரீ அசோகன், நூரின் ஷெரீஃப், சஞ்சு சானிசென் மற்றும் ஜியோ பேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

"டிடெக்டிவ் ஷெர்டில்"

பாலிவுட்டில் ரவி சாப்ரியா இயக்கத்தில் தில்ஜித் தோசன்ஜ், சங்கி பாண்டே, டயானா பென்டி ஆகியோர் நடித்துள்ள படம் 'டிடெக்டிவ் ஷெர்டில்'. டிடெக்டிவ் ஷெர்டில் ஒரு மர்மமான கொலை வழக்கை மையமாகக் கொண்டது. இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

"கிரவுண்ட் ஜீரோ"

கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) திரைப்படம் கடந்த ஏப்ரலம் மாதம் 25ம் தேதி வெளியான ஒரு இந்தி ஆக்ஷன்-த்ரில்லர் படமாகும். இது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கிய இப்படம், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

"சிஸ்டர் மிட்நைட்"


இயக்குனர் கரண் கந்தாரி இயக்கத்தில் ராதிகா ஆப்தே, அசோக் பதக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் சிஸ்டர் மிட்நைட் (Sister Midnight). சிஸ்டர் மிட்நைட் ஒரு வினோதமான நகைச்சுவையுடன் கூடிய திகில் படமாகும். இப்படம், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

"பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்"


பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். கடந்த மாதம் வெளியான இப்படம் நல்லவரவேற்பை பெற்றது. இதில் , பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 17-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியானது.

Tags:    

Similar News