OTT

இந்த வார ஓடிடி ரிலீஸ்

Published On 2025-06-12 18:20 IST   |   Update On 2025-06-12 18:20:00 IST
  • அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் லெவன்.
  • எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ் லெவல்.

வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றது. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

டிடி நெக்ஸ் லெவல்

எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ் லெவல். இதில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Full View

ஆலப்புழா ஜிம்கானா

காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ஆலப்புழா ஜிம்கானா. இப்படம் பாக்சிங்கை மையமாக வைத்து அதில் காதல் நகைச்சுவை என கதைக்களம் அமைந்திருக்கும். இதில் நஸ்லென், லுக்மன் அவரன் , கணபதி , அனகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Full View


சுபம்

சமந்தா தயாரிப்பில் உருவான முதல் தெலுங்கு படம் சுபம் . இதில் ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷ்ரியா கொந்தம், சரண் பெரி, ஷ்ரவணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் நாளை ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது.

Full View

லெவன்

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் லெவன். விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரியா ஹரி , ஷசாங் , ரவி வர்மா , கீர்த்தி தாம ராஜூ , அபிராமி , திலீபன் , ரித்விகா ஆகியோ நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜூன் 13 ஆம் தேதி ஆஹா தமிழ் மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் டிவிஸ்ட் பலரால் பாராட்டப்பட்டது.

Full View

படக்களம்

மனு ஸ்வராஜ் இயக்கத்தில் சூரஜ் வெஞ்சமூடு, ஷரப் யு தீன் , சந்தீப் பிரதீப் விஜய் பாபு ஆகியோர் நடித்துள்ள படம் 'படக்களம்'. கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இப்படம் ஒரு உடல்ம்பில் இருந்து மற்றொரு உடம்பை கட்டுப்படுத்தும் சக்தியை வைத்து காமெடியாக உருவாகியுள்ள திரைப்படமாகும்.

Full View

கேசரி சாப்டர் 2

கரன் சிங் தியாகி இயக்கத்தில் அக்ஷய் குமார் , மாதவன் , அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேசரி சேப்டர் 2. இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

Full View

Tags:    

Similar News