OTT
நித்தின் நடித்த தம்முடு படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
- தெலுங்கு நடிகரான நித்தின் சமீபத்தில் தம்முடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
- படத்தில் காந்தாரா புகழ் சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகரான நித்தின் சமீபத்தில் தம்முடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி மகக்ளிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. படத்தில் காந்தாரா புகழ் சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் லயா, ஸ்வாசிகா, வர்ஷா பொல்லம்மா, சௌரப் சச்தேவா நடித்துள்ளனர். படத்தின் இசையை அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தில்ராஜு தயாரித்தார்.
சினிமா திரையரங்குகளில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும், வசூலில் ஏமாற்றத்தை சந்தித்தது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
திரையரங்கிள் கைக்கொடுக்காத இத்திரைப்படம் ஓடிடியில் பார்த்து ஆதரவு கொடுப்பார்கள் என படக்குழு எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.