OTT

கண்ணப்பா முதல் பன் பட்டர் ஜாம் வரை - இந்த வார ஓடிடி ரிலீஸ்

Published On 2025-09-04 18:25 IST   |   Update On 2025-09-04 18:25:00 IST
பான் இந்தியா படமாகக் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியானது 'கண்ணப்பா' திரைப்படம்.

திரையரங்குகள் தாங்கள் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்களை அதே உற்சாகத்துடன் பார்க்க இந்த ஓடிடி தளங்கள் முக்கிய பங்குவகிக்கிறது. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கண்ணப்பா

பான் இந்தியா படமாகக் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியானது 'கண்ணப்பா' திரைப்படம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தனர். இருவரும் இணைந்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இந்த திரைப்படம், வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

பன் பட்டர் ஜாம்

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

சரண்டர்

பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மற்றும் சுஜித் சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சரண்டர்'. கவுதமன் கணபதி இயக்கத்தில் போலீஸ் விசாரணையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது. கடந்த ஆக.1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.

புட்டேஜ்

‛விடுதலை' நாயகி மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'புட்டேஜ்'. த்ரில்லர் கதைக்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது. சைஜூ ஸ்ரீதரன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சூ ஃப்ரம் சோ

ஜெ.பி தும்மினாட் இயக்கத்தில், உருவான காமெடி திரைப்படம் 'சூ ப்ரம் சோ'. கன்னட திரையரங்கில் சூப்பர் ஹிட் அடித்த இந்த திரைப்படம், ரூ.120கோடி வரை வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. கன்னடம் தவிர்த்து தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5 அல்லது 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் ராஜ் பி ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags:    

Similar News