சினிமா

தலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை

Published On 2018-11-21 22:57 IST   |   Update On 2018-11-21 22:57:00 IST
சமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம்.
சமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம். அவர் நடனம் ஆடும் அழகை பார்த்தே பல ஹீரோக்கள் அசந்து தங்கள் படங்களுக்கு பரிந்துரை செய்தார்களாம்.

அம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்த குவிந்த நிலையில் லைட்டா தலைக்கனமும் ஏறியதாம். சர்ச்சை நடிகையை விரட்டிக் காட்டுகிறேன் பார் என்று சவால்விட்டாராம். இதை கேட்டு சர்ச்சை நடிகை ஒன்றுமே சொல்லவில்லையாம். இதற்கிடையே சீனியர் நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டாராம் நடிகை.

அம்மணிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். அதற்கு காரணம் நடிகையின் தலைக்கனம் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம். 
Tags:    

Similar News