சினிமா செய்திகள்

அஜித் நடிக்கும் AK64 படத்தில் இணையும் மோகன் லால்?

Published On 2025-06-19 16:38 IST   |   Update On 2025-06-19 16:38:00 IST
  • AK64 படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
  • AK64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. Good Bad ugly படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,

படம் பான்- இந்தியா படமாக, பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஏகே64 படத்தில் மோகன் லால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக மோகன் லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News