சினிமா செய்திகள்

விண்ணைத்தாண்டி வருவாயா – 1300 நாட்கள் ரீ-ரிலீஸ் கொண்டாட்டம்!

Published On 2025-08-16 15:26 IST   |   Update On 2025-08-16 15:26:00 IST
  • அதில் முதன்மையானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" (2010) திரைப்படம்.
  • இன்றுடன் திரைப்படம் ரீ-ரிலீசாகி 1300 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும் தான் காலம் கடந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் புது புது உணர்வுகளோடு வாழ்ந்து கொண்டே இருக்கும். அதில் முதன்மையானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" (2010) திரைப்படம்.

இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இந்த கதாப்பாத்திரத்தை இவர்களை தவிர வேறு யாராலும் மிக கச்சிதமாக நடித்திருக்க முடியாது. திரைப்படம் வெளியன போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் மீண்டும் ரீ–ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்கள் அளித்த வரவேற்பு இன்னொரு வெற்றிக்கதை. திரையரங்குகளில் மீண்டும் ஹவுஸ் ஃபுல் காட்சி, ரசிகர்கள் ஆரவாரம், பாட்டுகளுக்கு தியேட்டரில் கைத்தட்டல் – இது 2010–ம் ஆண்டின் நினைவுகளை அப்படியே மீண்டும் கொண்டு வந்தது.

இன்றுடன் திரைப்படம் ரீ-ரிலீசாகி 1300 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒரு காதல் படம் இத்தனை நாட்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, இன்னும் பேசப்படுவது தமிழ் சினிமா வரலாற்றில் அபூர்வம்

சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் #1300DaysOfVTV என்று ஹாஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். மீண்டும் மீண்டும் பார்த்தாலும் புதிதாகவே உணர்வுகளை தரும் படம் என்ற பெருமை VTV–க்கே பொருந்தும்.

விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு படம் மட்டுமல்ல – அது ஒரு உணர்வு, அது ஒரு தலைமுறையின் காதல் கதை. 1300 நாட்கள் கடந்தும் இன்னும் ரசிகர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது, அந்த படத்தின் மாபெரும் வெற்றியைச் சுட்டிக்காட்டுகிறது.

Tags:    

Similar News