சினிமா செய்திகள்

தர்மம், நியாயம் தான் ஜெயிக்கும் - ஆனால் கொஞ்சம் லேட்டாகும் - 'சர்கார்' விழாவில் விஜய் பேசியது வைரல்

Published On 2026-01-09 14:27 IST   |   Update On 2026-01-09 14:27:00 IST
  • அங்க ஒருத்தன் கிளம்பி வருவான் அடிபட்டு, நொந்து, நூலாகி அவன் லீடரா மாறுவான்.
  • அவனுக்கு கீழ நடக்கும் பாருங்க ஒரு சர்கார்...

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கடைசி படமான 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தொடர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தணிக்கை சான்றிதழ் உடனடியாக வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தணிக்கை குழு மறுப்பது விஜய்க்கு அரசியல் அழுத்தரப்படுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

'ஜன நாயகன்' படத்திற்காக பலரும் குரல் கொடுக்கும் நிலையில், இதுகுறித்து இதுவரை விஜய் திறக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் இதற்கு முன் தனது படங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்து விஜய் பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், 'சர்கார்' பட விழாவில் விஜய் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. விஜய் பேசுகையில், ஒன்னு மட்டும் உறுதி. தர்மம் தாங்க ஜெயிக்கும்... நியாயம் தாங்க ஜெயிக்கும்... ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்...

அங்க ஒருத்தன் வருவான் பாருங்க. புழுக்கம் ஏற்பட்டா மழை பெய்கிற மாதிரி ரொம்ப நெருக்கடி ஏற்பட இந்த தகுதியான மனிதர்கள ஆட்டோமெட்டிக்கா உள்ளே கொண்டு வந்து சேர்த்திடும். அங்க ஒருத்தன் கிளம்பி வருவான் அடிபட்டு, நொந்து, நூலாகி அவன் லீடரா மாறுவான். இயற்கை... இயற்கையானது. அதை ஒன்னும் பண்ணமுடியாது. அவனுக்கு கீழ நடக்கும் பாருங்க ஒரு சர்கார்... என்று பேசியது இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 



Tags:    

Similar News