சினிமா செய்திகள்

நாளை முதல் "பராசக்தி"- டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Published On 2026-01-09 16:12 IST   |   Update On 2026-01-09 16:12:00 IST
பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

இந்நிலையில் பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.மத்திய தணிக்கை வாரியம் சான்று வழங்கியதை அடுத்து நாளை திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், பராசக்தி படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக டான் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News