சினிமா செய்திகள்
ஆக்ஷனில் மிரட்டும் சமந்தா... வெளியானது 'மா இண்டி பங்காரம்' டீசர்
- ராஜ் நிடிமோரு இயக்கத்தில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து இப்படத்தை தயாரித்துள்ளார் சமந்தா.
- டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த சமந்தா, பல்வேறு பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் கடந்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.
தெலுங்கில் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. தி 'ஃபேமிலி மேன் 2' வெப் தொடரின் இயக்குநரிகள் ஒருவரான ராஜ் நிடிமோரு இயக்கத்தில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து இப்படத்தை தயாரித்துள்ளார் சமந்தா.
இந்த நிலையில், 'மா இண்டி பங்காரம்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரில் புதிதாக திருமணமான ஒரு பெண் தன் கணவரின் ஊருக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பது, அவள் ஒரு வழக்கமான மருமகள் போல் இல்லாமல் அதிரடி ஆக்ஷனில் சமந்தா நடித்துள்ளார். இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.