சினிமா செய்திகள்

தி ராஜா சாப்- திரைவிமர்சனம்

Published On 2026-01-09 21:59 IST   |   Update On 2026-01-09 21:59:00 IST
  • படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

பிரபாஸ் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஆனால், அந்த பாட்டி ஞாபக மறதி உடையவர். ஆனால், தொலைந்து போன கணவர் பற்றி மட்டும் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார். கண்டிப்பாக தன் கணவரை பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

இதனால் தன்னை வளர்த்த பாட்டிக்காக அவரை தேடி பிரபாஸ் கிளம்ப, சென்ற இடத்தில் நிதி அகர்வால், மாளவிகாவுடன் காதல் வயப்படுகிறார்.

அதே நேரத்தில் தாத்தாவான சஞ்சய் தத் ஒரு மாந்திரிகவாதி, பணத்தை திருடுபவர் என்றெல்லாம் தெரியவர, மறு பக்கம் சமுத்திரகனியும் சஞ்சய் தத் தேடி வர, பிறகு என்ன ஆனது ? தாத்தாவை பிரபாஸ் கண்டுப்பிடித்தாரா? சமுத்திரகனி எதற்கு தேதி வருகிறார் என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

பிரபாஸை எப்போதும் வயலண்ட்டாகவே பார்த்த நமக்கு, இந்த படத்தில் புதியதாக தெரிகிறார். ஹீரோயின்களான மாளவிகா, நிதி, ரிதி என 3 பேரும் அவர்களுக்கு வழங்கிய கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். படம் ஆரம்பித்து சஞ்சய் தத் வரும் வரை பெரும் சோதனையாகவே செல்கிறது.

இயக்கம்

எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் கதை ஒரு இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்பது பொறுமையை சோதிக்க வைக்கிறது. படத்தின் நீளமும் அதிகம். எப்படா படம் முடியும் என்று படம் பார்க்க செல்பவர்களை கலங்கடிக்க வைத்திருக்கிறது.

இசை

தமன் இசை படத்திற்கு பலமே.

ஒளிப்பதிவு

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

ரேட்டிங்- 1.5/5

Tags:    

Similar News