சினிமா செய்திகள்
கார்ல் மார்க்ஸ் சிலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி
- மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது.
- இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.
மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனையடுத்து மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையுடன் சமுத்திரக்கனி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.