சினிமா செய்திகள்
TVK கட்சியில் இணைவேனா? - விஜயுடன் தன்னை ஒப்பீடு செய்வது குறித்து பேசிய TTF வாசன்
- TTF வாசன் நடித்துள்ள ஐபிஎல் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
- இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".
பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஐபிஎல் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய TTF வாசன், "தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது போன்ற அரசியல் ஆசை இல்லை. நடிகர் விஜயுடன் என்னை ஒப்பீடு செய்ய வேண்டாம், இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.