சினிமா செய்திகள்

கோவை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை திரிஷா

Published On 2024-12-14 17:35 IST   |   Update On 2024-12-14 17:35:00 IST
  • நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
  • சூர்யா 45 படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார்.

கங்கா படத்திற்கு அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தனது முதல் படத்தில் நாயகனாக நடித்த சூர்யாவுடனே மீண்டும் அவர் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை த்ரிஷா தற்போது கோவையில் உள்ள மருத மலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News