சினிமா செய்திகள்
null

சந்தானம் நடித்த DD Next Level படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு

Published On 2025-04-29 10:59 IST   |   Update On 2025-04-29 11:25:00 IST
  • முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
  • இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கீத்திகா திவாரி, யாஷிகா, கஸ்தூரி,பிரமாஜி, நிழல்கள் ரவி, ஷா ரா, லொல்லு சபா மாறன், ராஜேந்திரன், லொல்லு சபா ஜீவா மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லர் நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு  வெளியாகிறது.

இப்படத்தில் சந்தானம் ஒரு யூடியூப் விமர்சகர் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News