சினிமா செய்திகள்

பன்னி குட்டி

காரியத்த முடிச்சிட்டு வாங்க.. காணிக்கை அப்புறம் வாங்கிக்குறேன் - பன்னி குட்டி டிரைலர்

Update: 2022-07-01 07:30 GMT
  • ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களில் யோகிபாபு நடித்துள்ளார்.
  • தற்போது கிருமி படத்தை இயக்கிய அனுசரண் இயக்கத்தில் பன்னி குட்டி படத்தில் நடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகிபாபு. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஏராளமான படங்கள் இவரின் கைவசம் உள்ளது.

பன்னி குட்டி

கிருமி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த அனுசரண் அடுத்ததாக இயக்கியுள்ள பன்னி குட்டி படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இதில் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முகமூடி, யுத்தம் செய், கிருமி, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. யோகிபாபுக்கே உரித்தான காமேடி பாணியில் உருவாகி இருக்கும் இந்த டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


Full View


Tags:    

Similar News