சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ்

விக்ரம் பட வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்

Published On 2022-06-06 17:18 IST   |   Update On 2022-06-06 17:18:00 IST
  • மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
  • இவர் இயக்கும் அடுத்த படத்தின் சம்பளத்தை தற்போது உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'விக்ரம்' படத்தைப் பற்றி புதிய புதிய தகவல்களும் வசூல் நிலவரங்களும் வந்தபடி உள்ளது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. அதோடு மலையாளத்தில் விக்ரம் படத்திற்கு பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் விக்ரம் படத்தை ரஜினிகாந்த் ரசித்துப் பார்த்திருக்கிறார். படம் அருமையாக இருக்கிறது என்று படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் - கமல்

இந்த வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்து அவர் இயக்க இருக்கும் விஜய் படத்திற்கு சம்பளமாக ரூ.13 கோடி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

Tags:    

Similar News